search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 28-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 28-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • அ.தி.மு.க. “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” அடுத்த மாதம் 28-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
    • சிவங்கை மாவட்டம்-மதியம் 2.30 மணிக்கு சிவகங்கை முத்து மகாலில் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" அடுத்த மாதம் 28-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு சிறப்புடனும், எழுச்சியுடனும் நடைபெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தலைமைக்கழக செயலாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம்-28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உலகநாதபுரம், பரமக்குடி தாலுகா ஏ.பி.ஷா மகால் அண்டு ரெசிடென்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை வழங்குகிறார்கள்.

    சிவங்கை மாவட்டம்-மதியம் 2.30 மணிக்கு சிவகங்கை முத்து மகாலில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., டாக்டர் பரமசிவம் கலந்து கொள்கிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம்-29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருத்தங்கல் மெயின்ரோடு, சிவகாசி ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம்-பிற்பகல் 3 மணிக்கு திருசெந்தூர் ரோடு, காமராஜர் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மகாலில் கூட்டம் நடக்கிறது.

    கலந்து கொள்பவர்கள்-முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, டாக்டர் பரமசிவம்.

    30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, கே.டி.சி. நகர் "மாதா மாளிகை" திருநெல்வேலி மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 3 மணிக்கு தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் தென்காசி இசக்கி மகாலில் கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா. வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, டாக்டர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தேனி முனிசிபல் ஆபிஸ் எதிரில் உள்ள வி.கே.வேலுச்சாமி திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

    இதில் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலு, பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, டாக்டர் பரமசிவம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மகாராஜா மகாலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனும் எஸ்.பி.எஸ். மகாலில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ். மணியன், டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா, டாக்டர் பரமசிவம் ஆகியோர் ஆலோசனை வழங்குகிறார்கள்.

    2.8.2023 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில், வாட்டர் டேங்க் ரோடு "ஒய்.ஆர்.மகாலில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, டாக்டர் பரமசிவம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டங்களில் தத்தமது மாவட்டங்களில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், ஆலோசனைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பினை நல்கிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஏனைய மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடும், மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலாளர்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள கழக நிர்வாகிகளோடும் இணைந்து ஆலோசனை கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×