search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆண் நண்பருடன் சுற்றுலா வந்தபோது மதுபோதையில் மயங்கி விழுந்த இளம்பெண்
    X

    ஆண் நண்பருடன் சுற்றுலா வந்தபோது மதுபோதையில் மயங்கி விழுந்த இளம்பெண்

    • யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.
    • மயங்கி விழுந்த இளம்பெண் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் அடுத்த வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து விட்டு செல்வார்கள்.

    இதற்கிடையே யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள், அங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு சென்று வருகின்றனர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஓடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் வைதேகி நீர்வீழ்ச்சி ஒடையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோவை மாநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு வந்திருந்தார்.

    இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இளம்பெண் மயங்கி விழுந்து விட்டார். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆம்புலன்ஸ் மூலம் இளம்பெண் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது இளம்பெண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் ஊட்டியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இளம்பெண் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

    இருவரும் விடுமுறை என்பதால் இங்கு வந்ததாகவும், 2 பேரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதில் இளம்பெண் போதை தலைக்கேறிய நிலையில் மயங்கியதும் தெரியவந்தது. முதலுதவி செய்து மாணவியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×