search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சைலேந்திரபாபு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: டி.ஜி.பி. பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் பெயர்கள் பரிசீலனை
    X

    சைலேந்திரபாபு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: டி.ஜி.பி. பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் பெயர்கள் பரிசீலனை

    • தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.
    • வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    புதிய டி.ஜி.பி.க்கான போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார், தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் உள்பட 10 பேர் உள்ளனர். டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இவர்களில் 3 பேர் இறுதி செய்யப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக டி.ஜி.பி. பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.

    சைலேந்திர பாபுவுக்கு வருகிற 30-ந்தேதி பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகும். எனவே வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×