search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்- ஆணைகளை வழங்கிய அமைச்சர்
    X

    7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்- ஆணைகளை வழங்கிய அமைச்சர்

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும்.
    • அரசு ஒதுக்கீட்டில் 200 இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், எம்பிபிஎஸ் படிப்புக்கு 459 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 106 இடங்கள் என ஆக மொத்தம் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த மாணவர்களுக்கு மருத்துவ ஆணைகளை வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கான ஆணையினை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    'சிஎம்சி மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள், தனலட்சுமி, வெங்கடேஸ்வராவில் தலா 75 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளனர். 7.5 % இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும். மருத்துவ படிப்பில் கூடுதலாக 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்ந்துள்ளன. மருத்துவ படிப்புக்கான பாடநூல்கள் அடங்கிய மடிக்கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×