search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சி
    X
    நாம் தமிழர் கட்சி

    சேலம்-சென்னை இடையேயான புதிய சாலை திட்டத்துக்கு எதிராக நாம் தமிழர் இணையவழி பிரசாரம்

    சமூக வலைத்தளமான டுவிட்டரில் இத்திட்டத்திற்கான எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வந்தனர்.

    சென்னை:

    பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் சேலம் சென்னை இடையேயான பயணத்தை 3 மணி நேரத்திற்கு குறைக்கும் விதத்தில் புதிய விரைவு சாலை திட்டம் நிறைவேற்றப்பட இருப்பது குறித்த தகவல்களை நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறது.

    இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இத்திட்டத்திற்கான எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வந்தனர். மேலும் இத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பேசிய காணொளிகளை வெளியிட்டும் இத்திட்டம் ஏன் தேவையற்றது என்றும் பதிவிட்டனர்.

    கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணியினால்தான் எட்டு வழிச் சாலை திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக கூறிய தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டம் முழுவதுமாக கைவிடப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

    ஆனால் தற்போது எட்டு வழி சாலைக்கு எந்தவிதத்திலும் மாற்றம் இல்லாத புதிய பெயரில் விரைவுச்சாலையாக கொண்டுவரப்படும் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. எதிர்ப்பினை பதிவு செய்யவில்லை என நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டனர். இது தொடர்பான கருத்துக்களை பெருமளவில் பதிவிட்டதன்மூலம் ஸ்டாப் சேலம்-சென்னை விரைவு சாலை என்பது இந்திய அளவில் டிரெண்டிங் ஆனதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×