search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    கொரோனா குறைந்தால் ஞாயிறு ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும் - தமிழக சுகாதாரத்துறை தகவல்

    தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், வேலூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இறங்கு முகமாக உள்ளது. சோழிங்கநல்லூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா தொற்றை குறைப்பதில் சவாலாக உள்ளது. 

    கோவை, கன்னியாகுமரி உள்பட 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை தொற்று குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். அதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் இறங்குமுகமாக இருந்தால் மட்டுமே கர்நாடகாவை போன்று வார இறுதி நாளில் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும். 

    தமிழகத்தில் தற்போது 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 12 ஆயிரத்து 134 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டும். 
    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×