search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்கள் முடக்குவதை கைவிடவேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

    5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே 5 வானொலி நிலையங்களும் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 29-ந்தேதி நான் கோரியிருந்த போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரசார்பாரதி விளக்கமளித்திருந்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

    ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

    5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே 5 வானொலி நிலையங்களும் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    Next Story
    ×