search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒமைக்ரான் அறிகுறி
    X
    ஒமைக்ரான் அறிகுறி

    கொரோனா தொற்று உறுதியானவர்களில் சேலத்தில் 25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

    சேலத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கண் காணித்து வருகிறார்கள்.
    சேலம்:

    தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி உள்ளது. குறிப்பாக பெரு நகரங்களில் ஒமைக்ரான் தொற்று அதி வேகமாக அதிகரித்து வருகிறது.

    சேலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் எடுக்கப்படும் பரிசோதனைகள் சேலம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவில் கொரோனா உறுதியானவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் சுமார் 25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஒமைக்ரான் அறிகுறிகள் உள்ள மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தற்போது 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை 6 ஆயிரமாக உயர்த்த சேலம் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடை பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். மேலும் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற வந்தாலும் வீட்டில் 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் தொற்று உள்ள வெளிநாடுகளில் இருந்து 415 பேர் கடந்த சில நாட்களில் சேலம் வந்துள்ளனர். இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×