search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் கொரோனா பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

    சென்னையில் 15 மண்டலங்களிலும் நோய் தொற்றை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கொரோனா உடல் பரிசோதனை கூடங்கள், மருத்துவ ஆலோசனை வழங்க டாக்டர்கள் குழு, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு உதவ களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 15 மண்டலங்களிலும் நோய் தொற்றை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் பெயர், அவர்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-

    திருவொற்றியூர் மண்டலத்துக்கு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் ஷ்ரவன் குமார் ஜடாவத்-94425 46000.

    மணலிக்கு தமிழக சாலைப் பிரிவு திட்ட இயக்குநர் கணேசன்-98421 85758.

    மாதவரம் மண்டலத்துக்கு தமிழக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி- 99400 22220.

    தண்டையார்பேட்டைக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டி.ஜி.வினய்-93427 14506.

    ராயபுரம் மண்டலத்துக்கு மாநில மனித உரிமை ஆணைய செயலாளர் விஜய கார்த்திகேயன்-98402 59309

    திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இணை மேலாண்மை இயக்குநர் பிரதீப்குமார்-95660 84473

    அம்பத்தூர் மண்டலத் துக்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ் குமார்-77081 12266.

    அண்ணாநகர் மண்டலத்துக்கு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் பழனிசாமி-94431 76657.

    தேனாம்பேட்டை மண்டலத்துக்கு தமிழ்நாடு உப்பு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் ராஜாமணி- 94450 21688.

    கோடம்பாக்கம் மண்டலத்துக்கு கால்நடை பராமரிப்பு, மீனவர் நலத்துறை இணைச் செயலாளர் விஜயலட்சுமி-94440 34855.

    வளசரவாக்கம் மண்டலத்துக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநர் மணிகண்டன்-94111 76033.

    ஆலந்தூர் மண்டலத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் நந்த கோபால்-99621 79999.

    அடையாறு மண்டலத்துக்கு சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா- 82853 15837.

    பெருங்குடி மண்டலத்துக்கு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன்-90033 59009.

    சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ்-89039 69999.
    Next Story
    ×