search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    திருவாரூர்:

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை.

    எனினும் அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆகிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும்.

    மழை

    இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.



    Next Story
    ×