search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகா தடுப்பூசி முகாம்
    X
    மெகா தடுப்பூசி முகாம்

    6-வது மெகா முகாம்: தமிழகத்தில் 22¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    6-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. இந்த மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

    23-ந் தேதி (நேற்று) நடைபெற்ற 6-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 65 ஆயிரத்து 646 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×