search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துர்கா ஸ்டாலின்
    X
    துர்கா ஸ்டாலின்

    சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

    கொடைக்கானல் சாய்பாபா கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே பிரசித்தி பெற்ற சாய்சுருதி ஆசிரமம் உள்ளது. இங்கு சத்யசாய் சேவா சங்கத்தின் சார்பில் காயத்ரிதேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக யாகசாலைபூஜை, வேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

    இன்று கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கும் பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானல் வந்தார். கோவிலுக்கு கார்மூலம் வந்த துர்கா ஸ்டாலினை சத்யசாயி சேவா நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

    அதனைதொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின் கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து மனமுருக வழிபட்டார். சிறிதுநேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    துர்கா ஸ்டாலின் வருகை குறித்து ஒருசில நிர்வாகிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
    Next Story
    ×