search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 36 சதவீதம் குறைவு

    வானிலை மையத்தின் பதிவுகளின் படி ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரை தென் மேற்கு பருவமழை 426 மி.மீட்டர் பெய்து இருக்க வேண்டும். ஆனால் 312 மி.மீட்டர் மட்டுமே பெய்து உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருமழை பற்றாக்குறையாக பெய்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை 3-வது வாரம் ஆன நிலையில் இப்போது தான் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    வானிலை மையத்தின் பதிவுகளின் படி ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரை தென் மேற்கு பருவமழை 426 மி.மீட்டர் பெய்து இருக்க வேண்டும். ஆனால் 312 மி.மீட்டர் மட்டுமே பெய்து உள்ளது.

    36 சதவீதம் குறைவாக பெய்துள்ள மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாநகரில் இன்னும் ஒரு வாரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வபோது லேசான மழை பொழிவும் இருக்கும். மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும் சிறுவாணி வனப்பகுதியிலும் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோடை மழை பொய்த்ததும், தென்மேற்கு பருவமழை தாமதம் ஆவதும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்ன வெங்காயம் 60 முதல் 70 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பயிர். கோடை மழை இல்லாததால் இந்த பயிர் அறுவடைக்கு 90 நாட்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை இல்லாதது, பருவமழை தாமதம் ஆவதால் மானாவாரி பயிர் சாகுபடியும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×