search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்ரீத்
    X
    பக்ரீத்

    ஜூலை 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு

    துல் ஹஜ் மாத முதல் பிறை நேற்று தென்பட்டதால், வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத், உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளைகளில் ஒன்றாகும், நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் ஜூலை 21-ந்தேதி புதன் கிழமையன்று கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது ஆயூஃப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், “ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூலை 11) துல் ஹஜ் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது. எனவே இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத் பண்டிகை) வருகிற ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×