search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிவாசலில் இருந்து புறப்பட்ட காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடிய காட்சி.
    X
    வாடிவாசலில் இருந்து புறப்பட்ட காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடிய காட்சி.

    புத்திரகவுண்டன்பாளையத்தில் 1200 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் 1200 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்தப் போட்டியினை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் சின்னத்தம்பி, ஏற்காடு சித்ரா, சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜல்லிக்கட்டில் ஆத்தூர் சேலம், திருச்சி, பெரம்பலூர், அறியலூர், துறையூர் கள்ளக்குறிச்சி, முசிறி, தொட்டியம், கோவை, கரூர், மதுரை திண்டுக்கல் ஈரோடு புதுக்கோட்டை தஞ்சாவூர் சின்னசேலம், மல்லியகரை கீரிப்பட்டி தம்மம்பட்டி செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி மல்லியகரை கீரிப்பட்டி, வாழப்பாடி அயோத்தியாபட்டினம், மங்களபுரம் புத்திரகவுண்டம் பாளையம், மங்களபுரம், சிங்கிபுரம், ராசிபுரம் நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கினர்.

    500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார்கள். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பைக் பிரிட்ஜ், வெள்ளிக்காசு டிரஸ்சிங் டேபிள், சைக்கிள். பிளாஸ்டிக் சேர், கட்டில், சில்வர், சில்வர் குடம் அண்டா போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மாடுபிடி வீரர்களுக்கு திடீரென விபத்து ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. வாழப்பாடி டி.எஸ்.பி. வேலுமணி தலைமையில் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×