search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர்
    X
    குடிநீர்

    தென்மாவட்டங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் 46 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிப்பு

    தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் தென்மாவட்டங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் 46 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க தாமிரபரணி ஆற்றில் 46 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இந்த 46 கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் பாதிப்படைந்தது.

    இதை சரிசெய்ய குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் உத்தரவின்பேரில் 120 என்ஜினீயர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேரில் சென்றும், தாமிபரணி ஆற்றுப்பகுதியில் உள்ள நீரேற்றும் பகுதிகளுக்கும் சென்று போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணியினை மேற்கொண்டனர்.

    இதில் தற்போது 36 கூட்டு குடிநீர் திட்டபணிகள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது. மேலும் 10 கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மதுரையைச் சேர்ந்த தலைமை என்ஜினீயர் மேற்பார்வையில் 4 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவல் மதுரை மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமை என்ஜினீயர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×