search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதை காணலாம்.
    X
    சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதை காணலாம்.

    கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக கனத்த மழை பெய்துள்ளது

    சென்னை மாவட்டத்தில் அம்பத்தூரில் அதிகபட்சமாக 56 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆணைக்காரன் சத்திரத்தில் 36 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஒரே நாளில் வெளுத்து வாங்கிய இந்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறு குளம், ஏரிகள் நிரம்பி விட்டன.

    அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் 34 செ.மீ. மணல்மேடு 34, குறிஞ்சிப்பாடி தலா 25, லால்பேட்டை 28 செ.மீ, பரங்கிப்பேட்டை 26, சீர்காழி, குடவாசல் தலா 21, கடலூர் 13, தஞ்சாவூர் 10, புதுச்சேரி 14, திருத்துறைப்பூண்டி 22, நாமக்கல் 17, தூத்துக்குடி 16.5, செய்யாறு 24 செ.மீ. பதிவாகி உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அம்பத்தூரில் அதிகபட்சமாக 56 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் 55 மி.மீ., எழும்பூர் 54 மி.மீ., பெரம்பூர் 40 மி.மீ., அயனாவரம் 36 மி.மீ., புரசைவாக்கம் 26 மி.மீ., தண்டையார்பேட்டை 29 மி.மீ., மாம்பலம் 23 மி.மீ., கிண்டி, மைலாப்பூர் தலா 12 மி.மீ. பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் 8.5 செ.மீ., தரமணி 14 செ.மீ., மேற்கு தாம்பரம் 11.5 செ.மீ., புழல் 30, வடசென்னை 24, சென்னை விமான நிலையம் 14, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 12, திருச்செந்தூர் 19, எண்ணூர் 24 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×