search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்வரத்து 12,894 கனஅடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 622 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 894 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று 8 ஆயிரத்து 622 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 894 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 15ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 91.78 அடியானது.
    Next Story
    ×