search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிய கருவிக்கான தொடக்கவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிய கருவிக்கான தொடக்கவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் அதிநவீன கருவி

    குறட்டையை கண்டறிய அதற்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையிலான அதிநவீன கருவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் மதுரை மாவட்ட கலெக்டரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் குறட்டைக்கு சிகிச்சை அளிக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி புதிய கருவியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பேராசிரியர் அருள் சுந்தரேஸ்குமார், இணை பேராசிரியர் தங்கராஜ் மற்றும் உதவி பேராசிரியர் விஜய்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கருவியின் பயன்பாடுகள் குறித்து துறை தலைவர் தினகரன் கூறியதாவது:-

    இந்த அதிநவீன கருவியின் மூலம் மனிதன் தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் மற்றும் குறட்டை ஆகியவற்றை அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. இக்கருவியின் மூலம் சுவாசத்தில் பங்கு பெறும் ஆக்சிஜன் அளவு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இருதயம், நுரையீரல் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை துல்லியமாக கண்டறியலாம். இந்த பரிசோதனையால் முக்கியமாக குறட்டைக்கான காரணங்களை கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும்.

    தனியார் மருத்துவமனைகளில் இந்த பரிசோதனையை செய்வதற்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு ஆஸ்பத்திரியில் முற்றிலும் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திலும் செய்து கொள்ளலாம்.

    மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இந்த கருவி பேருதவியாக இருக்கும். மேலும் அவர்களின் ஆராய்ச்சி தொடர்பாக பல வகைகளில் உதவிபுரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×