search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்ததையடுத்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று காலையில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், இரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்ததால், அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கான நீர் திறப்பு 15,000ல் இருந்து 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்ததையடுத்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×