search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்
    X
    விவசாயிகள் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்

    விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயக்கோட்டை:

    பாரத் பெட்ரோலியத்திற்கான ஐ.டி.பி.எல். குழாய்களை கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 750 கிலோ மீட்டர் தொலைவிற்கு பதிப்பதற்கான திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 கி.மீ. தொலைவிற்கு 1,200 விவசாயிகளின் 3,200 ஏக்கர் நிலம் பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சூளகிரி அருகே சாமனபள்ளி, ஓசூர் அருகே முத்தாலி ஆகிய இடங்களில் கருப்புக்கொடியுடன் விவசாய நிலத்தில் இறங்கி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூரில் விவசாயிகள் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ராயக்கோட்டை கிளை விவசாயிகள் சங்க செயலாளர் தூருவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கோரிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜூ, தேன்கனிக்கோட்டை வட்ட செயலாளர் அனுமப்பா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சாலைகள் வழியாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதே போல ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் நிலத்தில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஓசூர் வட்ட செயலாளர் தேவராஜன், பொருளாளர் ராஜாரெட்டி, கிளை செயலாளர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×