search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சரி
    X
    நர்சரி

    உலக சுற்றுச்சூழல் தினம்- தமிழகம் முழுவதும் ஈஷா நர்சரிகள் நாளை முதல் இயங்கும்

    கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்ட நர்சரிகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
    கோவை:

    தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வருகின்றன. இந்த நர்சரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக் கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நர்சரிகள் மார்ச் 25-ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில், 72 நாட்கள் கழித்து உலக சுற்றுச்சூழல் தினமான நாளை முதல் (ஜூன் 5) அவை அனைத்தும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இவை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.

    தேக்கு, செம்மரம், மலைவேம்பு போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்கள், புங்கன், வேங்கை, மஞ்சள் கொன்றை போன்ற நிழல் தரும் மரங்கள், கொய்யா, நெல்லி, நாவல் போன்ற நாட்டு ரக பழ மரங்கள் மற்றும் பூ மரங்கள் என அனைத்து வகையான மரக் கன்றுகளும் விநியோகத்துக்கு தயாராக உள்ளன.

    இம்மாதம் முதல் பருவமழை தொடங்குவதால் மரங்கள் நடுவதற்கு இது ஏற்ற காலமாக உள்ளது. ஆகவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மரக் கன்றுகளை வாங்க வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நர்சரிகளில் ஹேண்ட் சானிடைசர்களும் வைக்கப்பட்டு இருக்கும்.

    சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டல பகுதியில் இருக்கும் ஈஷா நர்சரிகள் மட்டும் மறு அறிவிப்புக்கு பிறகு திறக்கப்படும்.
    Next Story
    ×