search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் மோசடி
    X
    ஆன்லைன் மோசடி

    ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.7½ கோடி மோசடி

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.7½ கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் மணி டீல் டிரேடிங் என்ற பெயரில் இணையதள நிறுவனம் நடத்தி வந்தார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்கள் பணத்தை நிலம், நகை மற்றும் பங்குச்சந்தையில் போட்டு பல மடங்கு கூடுதலாக தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார். திருச்சி, சேலம், சென்னை உள்பட பல பகுதிகளில் அவர் கிளைகளையும் திறந்தார்.

    இதனை நம்பிய ஏராளமானோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தனர். முதலில் அறிவித்தபடி பணத்திற்கு உரிய பயன்களை வழங்கினார்.அதன்பின் பங்குச் சந்தை சரிந்து விட்டதால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என ஏமாற்றி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாணை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்ததால் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

    அவரது நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. கடந்த 23-ந் தேதி வரை பெறப்பட்ட 163 புகார்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சுமார் ரூ.7½ கோடி வரை செந்தில்குமார் வசூலித்து திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×