search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய எடப்பாடி பழனிசாமி

    சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
    எடப்பாடி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து சேலம் வந்தார். பின்னர் மாலையில் சேலம் 3 ரோடு அருகே வரலட்சுமி மகால் மைதானத்தில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அப்போது எடப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பயணியர் விடுதியில் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அவரிடம் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம் பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக இன்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    Next Story
    ×