search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதிகள் மோதல்
    X
    கைதிகள் மோதல்

    புதுவை ஜெயிலில் கைதிகள் மோதல்- தடுக்க முயன்ற வார்டன் மீதும் தாக்குதல்

    புதுவை ஜெயிலில் ரவுடிகள் மோதிக் கொண்ட சம்பவம் மற்ற கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய ஜெயலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அதுபோல் காலாப்பட்டு ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் பிரபல ரவுடியான டிராக் சிவா அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இதேபோல் அரியாங்குப்பம் பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய பிரபல ரவுடியான அஸ்வினும் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே இவர்களுக்குள் யார்? பெரியவர் என ஜெயலில் போட்டி ஏற்பட்டதாகவும், இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது டிராக் சிவா மற்றும் அவரது நண்பர் விக்கி என்ற விக்கிராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அஸ்வினை தாக்க முயன்றனர்.

    இதையடுத்து அஸ்வின் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து டிராக் சிவாவையும், விக்கியையும் தாக்கினர். இதனால் ஜெயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பணியில் இருந்த வார்டன்கள் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் வார்டன்களையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் வார்டன்கள் ஜீவரத்தினம்(வயது 37), சக்கரவரத்தி (34), பாவாடைசாமி (52), ரூபசந்திரன் (32) ஆகிய 4 பேருக்கும் கைதி விக்கி ராஜாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயம் அடைந்த 5 பேரையும் ஜெயில் அதிகாரிகள் கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கைதிகள் அறையில் 19 மற்றும் 20 வயதுடைய கைதிகள் அதிகளவில் இருந்துள்ளதாகவும், அஸ்வினின் ஆதரவாளர்களான அவர்களை ரவுடி டிராக் சிவா அவர்களை மிரட்டி சிறுநீர் கழித்த பாத்திரத்தை எடுத்து செல்ல செய்வது, துணி துவைக்க செய்வது என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனை அஸ்வினின் ஆதரவாளர்கள் மறுத்து வந்ததால் இந்த மோதல் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயிலில் ரவுடிகள் மோதிக் கொண்ட சம்பவம் மற்ற கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×