search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம்.
    X
    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம்.

    சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் பயணிகள் கடும் அவதி

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வழி காட்டி பலகைகள் சரிவர இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்ட்ரல்- விமான நிலையம், வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது.

    பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்கிறார்கள். சென்ட்ரலில் புறநகர் ரெயில் நிலையம், விரைவு ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.

    தினமும் பல லட்சம் பயணிகள் சென்ட்ரலுக்கு வருகிறார்கள். இங்கு மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்துக்கு செல்ல சரிவர வழிகாட்டி பலகைகள் இல்லை. இதனால் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் கடும் குழப்பம் அடைந்து வருகிறார்கள்.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எளிதில் பயணிகள் சென்று வர ஆங்காங்கே நுழைவுப் பாதைகளில் வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ரெங்கநாதன் என்ற பயணி கூறியதாவது:-

    சென்ட்ரலில் பயணிகள் எளிதில் வந்து செல்ல வழிகாட்டி பலகைகள் சரிவர அமைக்கப்படவில்லை. மெட்ரோ ரெயிலுக்கு செல்ல சுரங்கப் பாதையில் செல்லும்போது முறையான வழிகாட்டி பலகை இல்லாததால் பயணிகள் ஏராளமானோர் கடும் குழப்பம் அடைந்து வருகிறார்கள்.

    பெரும் போராட்டத்துக்குப் பின் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தை அடைய வேண்டி உள்ளது. ‘எஸ்கலேட்டர்’, ‘லிப்ட்’, படிக்கட்டுகள் அருகில் வழி காட்டி பலகைகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×