search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை மீட்டுத்தாருங்கள்- சென்னை ஐகோர்ட்டில் தாயார் மனு

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை மீட்டுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வருகிறது.

    கடத்தல், பாலியல் வழக்குகளை தொடர்ந்து அவரது ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளை மீட்டுத்தர கோரி பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

    ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

    எனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. நித்யானந்தாவின் சட்ட விரோத காவலில் இருந்து எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பிரானாசாமியை மீட்கக் கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.
    Next Story
    ×