search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் (கோப்புப்படம்)
    X
    ரெயில் (கோப்புப்படம்)

    தண்டவாள பராமரிப்பு பணி- மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து மாற்றம்

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் ஒருசில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு நாளை(5-ந்தேதி)முதல் வருகிற 15-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    அதன்படி நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56319) போக்குவரத்தில் வியாழன் தவிர மற்ற நாட்களில் இருமார்க்கங்களிலும் திண்டுக்கல்- திருப்பரங்குன்றம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769) போக்குவரத்தில் வருகிற 8, 11, 15-ந்தேதிகளில் மதுரை- நெல்லை இடையேயும், 5, 6, 7,10, 12, 13, 14-ந்தேதிகளில் இருமார்க்கங்களிலும் கோவில்பட்டி- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    செங்கோட்டை- மதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56734) போக்குவரத்தில் வருகிற 6 முதல் 12-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் இருமார்க்கங்களிலும் விருதுநகர்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56723) வருகிற 11 முதல் 14-ந்தேதி வரை உச்சிப்புளி- ராமேசுவரம் இடையே இருமார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16191) வருகிற 5 முதல் 12-ந்தேதி வரை திண்டுக்கல்- நாகர்கோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே இருமார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இருந்தபோதிலும் வருகிற 8 முதல் 15-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்தும், வருகிற 9-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரெயிலும் வழக்கம்போல இயங்கும்.

    திருச்சியில் இருந்து வழக்கமாக 10.40 மணிக்கு புறப்படும் மானாமதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 76807) வருகிற 5 முதல் 14-ந்தேதி வரை 10.05 மணிக்கே கிளம்பி, 2½ மணி நேரம் தாமதமாக மானாமதுரை செல்லும்.

    திருச்சியில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627) வருகிற 5 முதல் 15-ந்தேதி வரை 9-ந்தேதி தவிர மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு பதில் 9.40 மணிக்கு 2½ மணி நேரம் தாமதமாக செல்லும்.

    சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 5 முதல் 15-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் மதுரை கோட்டத்துக்கு 2½ மணி நேரம் தாமதமாக செல்லும்.

    சென்னை- தூத்துக்குடி இணைப்பு ரெயில் (வண்டி எண்: 16129) வருகிற 5 முதல் 15-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் 1½ மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி செல்லும்.

    திருச்சி- ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56829) வருகிற 5 முதல் 7-ந்தேதி மற்றும் 9-ந்தேதி ஆகிய நாட்களில் ½ மணி நேரம் தாமதமாக ராமேசுவரம் செல்லும்.

    மதுரை- திண்டுக்கல் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56708) வருகிற 5 முதல் 15-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ½ மணி நேரம் தாமதமாக திண்டுக்கல் செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×