search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    திருப்பூரில் பணி சுமை காரணமாக சோதனைசாவடியில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் கதிரேசன் (33). இவர் போலீஸ் நிலையத்தில் நீதிமன்ற பணிகளை கவனித்து வந்தார். அதிக பணிச்சுமை காரணமாக தனக்கு வேறு பணிகளை ஒதுக்கீடு செய்யுமாறு மேல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இருப்பினும் அவருக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 3 நாள்களாக விடுப்பில் இருந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்போது உயர் அதிகாரி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் மேலும் மனமுடைந்து காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தாராபுரம் ரோட்டில் உள்ள சோதனைச் சாவடிக்கு பணிக்கு சென்றார்.

    அப்போது அங்கு திடீரென மறைத்து வைத்திருந்த வி‌ஷத்தை எடுத்து போலீஸ்காரர் கதிரேசன் குடித்தார். பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீஸ்காரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×