search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தொடர் மழையால் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது

    திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் மழையால் கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து காலை 8 மணி வரை மிதமான மழை பெய்தது. பின்னர் காலை 9 மணியளவில் இருந்து தொடர்ந்து ½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.15 மணி வரை பலத்த மழை பெய்தது.

    இரவிலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல்வேறு கோவில்கள் உள்ளது. அதுமட்டுமின்றி கோவில்கள் அருகில் குளங்களும், வனப்பகுதியிலும் பல்வேறு குளங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக கிரிவலப்பாதையில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் வர தொடங்கி உள்ளதால் நிரம்பி வருகிறது. ஒருசில குளங்கள் நிரம்பியும், சில குளங்கள் பாதி வரை நிரம்பியும் காணப்பட்டது.

    அதுமட்டுமின்றி சில குளங்களில் தண்ணீர் இல்லாமலும் உள்ளது. எனவே மழை காலத்தை கருத்தில் கொண்டு குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரினால் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து குளங்களில் தண்ணீர் நிரம்பும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×