search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலி கால் சென்டர் நடத்தி வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது

    சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக 5 பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னையில் வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதுபற்றி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்கி மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது.

    மணிகண்டன் என்பவர் அந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள், இளைஞர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு கடன் வாங்கி தருவதாக இந்த கும்பல் பெரிய அளவில் மோசடி செய்துள்ளது. பொதுமக்களின் பெயரில் கடன் வாங்கி அந்த பணத்தை சுருட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 5 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×