search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.
    X
    குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.

    கிணத்துக்கடவில் இன்று அதிகாலை நூல் மில்லில் தீ விபத்து

    கோவை கிணத்துக்கடவில் இன்று அதிகாலை நூல் மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையத்தில் இருந்து காரச்சேரி செல்லும் சாலையில் தனியார் நூல்மில் உள்ளது. பஞ்சில் இருந்து நூல் தயாரித்து பல இடங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது மில்லில் இருந்து புகை கிளம்பியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பஞ்சு மூட்டைகள் தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமையில் கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு லாரிகள் வரவழைக்கப்பட்டது.

    கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மேற்பார்வையில் 21 வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×