search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17ஆயிரம் கனஅடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று 19ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 17ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 19ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 17ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 18ஆயிரம் 900கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 16ஆயிரம் 900 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 120 அடியாகவே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×