search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.
    X
    கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே அட்டை பெட்டிகளில் பதுக்கிய புகையிலை பொருட்கள் - வாலிபர்களிடம் விசாரணை

    திண்டுக்கல் அருகே 4 அட்டை பெட்டிகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே காப்பிளியப்பட்டியில் சாலையோரம் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டுகள், ராம்குமார், சக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது 4 அட்டை பெட்டிகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கன்னிவாடி 7-வது வார்டைச் சேர்ந்த உசேன் மகன் சிக்கந்தர் (வயது 32), சாகுல் அமீது மகன் ரபீக் (30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனை எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? எங்கு விற்பனைக்காக அனுப்ப திட்டமிட்டு இருந்தனர்? இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×