search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கோட்டையில் இன்று காலை 500 புதிய பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    சென்னை கோட்டையில் இன்று காலை 500 புதிய பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    போக்குவரத்து கழகத்தின் சார்பில் 500 புதிய அரசு பஸ்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

    சென்னை கோட்டையில் இன்று காலை போக்குவரத்து கழகங்கள் சார்பில் 500 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை கோட்டையில் இன்று காலை போக்குவரத்து கழகங்கள் சார்பில் 500 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்திற்கு 150 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், சேலம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 110 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், என மொத்தம் 158 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலான 500 புதிய பேருந்துகளும் விடப்பட்டன.

    இதன் அடையாளமாக 7 பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13-ம் அணி தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையாக மாற்றம் செய்யப்பட்டது. இப்பேரிடர் மீட்புப் படைக்கு தேவையான நவீன உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கும், பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அளிப்பதற்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

    அந்த அரசாணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையின் பயன்பாட்டிற்காக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பேரிடர் மேலாண்மை, தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்களான இன் பிளாட்டபுள் பைபர் போட், புல்லட் கார்பைடு டிப்பிடு செயின்சா, டை மண்டு செயின்சா, கான்கிரீட் ஹமர் டிரில், சுவாசக் கருவி மற்றும் சிலிண்டர், மல்டி பங்சன் டவர் லைட் ஜெனரேட்டர், உயிர் காக்கும் மிதவைகள் மற்றும் ஜாக்கெட்டுகள், ஏர் லிப்டிங் பேக், கேஸ் கட்டர் உள்ளிட்ட 137 உபகரணங்களை வழங்கினார்.
    Next Story
    ×