search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவில் ஒரு அரிசியுடன் 2 உலக கோப்பைகள் இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    நடுவில் ஒரு அரிசியுடன் 2 உலக கோப்பைகள் இருப்பதை படத்தில் காணலாம்.

    20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கோப்பை- செலவு வெறும் 60 ரூபாய்

    விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி ஒருவர், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலக கோப்பையை போன்று உலக கோப்பையை செய்துள்ளார்.
    விழுப்புரம்:

    இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கோப்பையுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

    இந்நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலக கோப்பையை போன்று விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி ரமேஷ், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை செய்துள்ளார். 60 ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த உலக கோப்பை ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவாக உள்ளது. இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டில் 40 மில்லி கிராம் எடையில் உலக கோப்பையை ரமேஷ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×