search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டாள் கோவில்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ஆண்டாள் கோவில்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    ஆண்டாள் கோவில்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench
    மதுரை:

    சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான ஆண்டாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் திருமுக்குளம் என்ற பெயரில் உள்ளது. இந்த குளத்தில் தெப்பத்தேர் நடைபெறும். ஆனால் சமீபகாலமாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீராழி மண்டபத்தில் உள்ள பழமையான கல் மண்டபங்கள் சிதைந்துள்ளன. மேலும் திருப்பாற் கடல் குளத்தின் நடுப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், நீர் ஆதாரங்களையும், நீர் வழிப்பாதையையும் பாதுகாக்கும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கட்டுபாட்டில் உள்ள திருமுக்குளம் உள்ளிட்ட 4 குளங்களையும் சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
    Next Story
    ×