என் மலர்
செய்திகள்

லாரி மீது ஆம்னி பஸ் மோதல்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உறவினர் உள்பட 5 பேர் காயம்
தருமபுரி:
பெங்களூருரில் இருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருச்சி மாவட்டம், வெங்கடத்தானூர் பகுதியை சேர்ந்த மணி (வயது49) என்பவர் ஒட்டினார்.
இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை அடுத்த குடிப்பட்டி மேம்பாலம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நடுரோட்டில் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னிபஸ் மோதியது. இதில் பஸ் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதா (39). இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தின் அண்ணன் மகள் ஆவார். தேவக்கோட்டையை சேர்ந்த மகேஷ் (36). முசிறியை சேர்ந்த கோபி (22), கொளத்தூரை சேர்ந்த சுரேஷ் (42), மற்றும் டிரைவர் மணி ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.