என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் 25-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் வருகிற 25-ந் தேதி(திங்கட்கிழமை) குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். அதற்கு காரணம் எந்த ஒரு ஆறும் தூர்வாரப்படவில்லை. பாசன மதகுகள், கட்டமைப்புகள் பராமரிப்பு பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Metturdam