search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இன்று டெங்கு காய்ச்சல் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
    X

    சேலத்தில் இன்று டெங்கு காய்ச்சல் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

    சேலத்தில் இன்று டெங்கு காய்ச்சல் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
    சேலம்:

    சேலத்தில் இன்று டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கனகராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

    முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 30-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து இன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் சேலம் அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்குகிறார்.

    இதையடுத்து அவர் நூற்றாண்டு விழா நடைபெறும் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகளை பார்வையிடுகிறார்.

    இன்று முதல் 3 நாட்கள் சேலத்தில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    Next Story
    ×