search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்- 5 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்- 5 பேர் கைது

    • படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.
    • கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், படகை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் மர்ம நபர்கள் சிலர் படகுடன் கடத்தலில் ஈடுபடுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கியூப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ், கந்தசாமி, தலைமை காவலர்கள் ராமர், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், முதல் நிலை காவலர்கள் இருதயராஜ், பழனி பாலமுருகன் ஆகியோர் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து அதனை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அதிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.

    இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி இந்திரா நகர் பிரபு (41) அலங்கார தட்டு ஜெயக்குமார் (32) தாளமுத்து நகர்-இந்திராநகர் இரட்சகர் (36) திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி ரஞ்சித்(42) மற்றும் திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெரு மெல்வர்(30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மெல்வருகு சொந்தமான படகையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×