என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீஃபெர்ட் 48 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் 4 பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியால் அந்த அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும்.
- இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது.
கொழும்பு:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் இலங்கையையும், 2-வது போட்டியில் (இந்தூர்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 3-வது ஆட்டத்தில்(கொழும்பு) வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 4-வது போட்டியில் (கவுகாத்தி) இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் 5-வது ஆட்டத்தில் (கொழும்பு) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
கொழும்பில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. நாளையும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.
- இந்திய அணியின் கீப்பராக கேஎல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. மேலும் கீப்பராக கேஎல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் இடம் பெற்றுள்ளார். இந்த அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-
கில் (கேப்டன்), ரோகித், கோலி, ஐயர், அக்சர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஜூரல், ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, சுந்தர், குல்தீப், ஹர்ஷித், சிராஜ், அர்ஷ்தீப் மற்றும் கிருஷ்ணா.
- சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
சூர்ய குமார் யாதவ் (C) அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் (VC) திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), வருண் சக்கரவர்த்தி, பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (WK), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்,
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது
- முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 3 வீரர்கள் சதம் அடித்தனர். கே.எல். ராகுல் 100 ரன்னும், துருவ் ஜூரல் 125 ரன்னும் ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர்
286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்தது.
3 வீரர்கள் சதம் அடித்தனர். கே.எல். ராகுல் 100 ரன்னும், துருவ் ஜூரல் 125 ரன்னும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 17 ரன் னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய 3-வது நாளை இந்தியா தொடர்ந்து விளையாடும் என்றும் எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆடாமல் ஆட் டத்தை முடித்துக் கொள் வதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஸ்டன் சேசுக்கு 2 விக்கெட்டும், ஜெய்டன் ஷீல்ஸ், ஜோமல் வாரிகன், கேரி பியர் ஆகி யோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தன.
286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் அடித்துள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அகமதாபாத்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா இதுவரை 286 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த 5 சிக்சர்களின் மூலம் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ஜடேஜா அடித்த 5 சிக்சர்களோடு 80 சிக்சர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (90), சேவாக் (90), ரோகித் சர்மா (88) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஜட்ரன் 38 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் நவ்சம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது.4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த நிலையில் ஜேகர் அலி 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷமிம் ஹொசைன் 33 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் போராடி 31 ரன் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
- ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் இடம் பெறுவார்களா என்பது நாளை தெரிய வரும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது அவர்கள் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஆடும் வீரர்களாக உள்ளனர்.
இவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற கேள்வி விவாதப் பொருளாக உள்ள நிலையில், இந்த இரண்டு சீனியர் வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தயாராக உள்ளனர். ஆனால், அவர்களை பிசிசிஐ தேர்வுக்குழு, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யுமா? என்ற தகவல் நாளை வெளியாக உள்ளது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வ விளம்பர டீசரை (Official Promotional Teaser) ஒளிபரப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், கோலி மற்றும் ரோகித் சர்மாவின் புகைப்படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இதுவும் அவர்கள் அணியில் இருப்பது உறுதி என்பதற்கான அடையாளம் என்று நம்பப்படுகிறது.

ரோகித் சர்மாவை பொறுத்தவரை மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றதில் இருந்து, ஒருநாள் அணியின் கேப்டன்சி பொறுப்பில் பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை. அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கத் தேர்வாளர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். ரோகித் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு உதவிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இந்த மாதம் 19-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பேக்கப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சன் கடைசியாக 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 69 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது.
கவுகாத்தி:
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, இலங்கை மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்க அணி 20.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சினலோ 22 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் லின்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளாக பியூமவுண்ட், ஏமி களமிங்கினர். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை பவுண்டரிகளாக சிதறடித்தனர். இறுதியில் இங்கிலாந்து 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
- ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல், கில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் விளாசிய கையோடு கில் (50) ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவரும் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜூரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு இருவரும் சதம் அடித்து அசத்தினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு சில ஓவர்களே இருந்த நிலையில் ஜூரல் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்தது.ஜடேஜா 104 ரன்னுடனும் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






