என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
- நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீஃபெர்ட் 48 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் 4 பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியால் அந்த அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.






