என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.
    • ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர். கடைசியாக அக்டோபர் 2025-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினர்.

    இரண்டு முக்கிய வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர்களுக்குப் போதுமான போட்டி அனுபவம் கிடைக்காது என பிசிசிஐ கருதுகிறது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தனது முடிவை உறுதி செய்துள்ளார். மேலும், நவம்பர் 26-ல் தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நவம்பர் 30-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளதால், சையத் முஷ்டாக் அலி தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    ஆனால், மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி, இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்தவிதமான தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. கோலி கடைசியாக 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவரை போன்ற வீரருக்கு ரூ.23¾ கோடி என்பது ரொம்பவே அதிகம்.
    • 2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார்.

    மும்பை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யரை ரூ.23¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    அவரை போன்ற வீரருக்கு இவ்வளவு தொகை என்பது ரொம்பவே அதிகம். மிடில் ஆர்டரில் அவர் வெவ்வேறு வரிசையில் இறக்கப்படுகிறார். அத்துடன் பந்து வீச்சில் அவரை பயன்படுத்துவதில்லை. 2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார்.

    2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் (11 ஆட்டத்தில் 142 ரன்கள் எடுத்தார்) அவரது சீரற்ற பேட்டிங் வரிசை மற்றும் மெகா தொகைக்கு ஏலம் போனதால் விழுந்த முத்திரை அவருக்கு சரியாக பொருந்தவில்லை.

    எனவே அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து கொல்கத்தா அணி பரிசீலிக்க வேண்டும். இதனால் அணியின் இருப்புத் தொகையும் அதிகமாகும். இப்போது அவரை விடுவித்து விட்டு ஏலத்தில் ஓரளவு நல்ல தொகைக்கு அவரை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.

    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள்.
    • அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது.

    மும்பை:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய 6 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ஆர்.சி.பி. போட்டிகளை நடத்த புனே மைதானம் விருப்பத்துடன் இருப்பதாக மராட்டிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன்.
    • தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

    கொல்கத்தா:

    இந்தியாவுக்கு வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த தொடர், 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக தென்ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாங்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமன் செய்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். நல்ல பார்மில் இருப்பதால் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் எனது பந்து வீச்சில் நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதை தொடர்வதை எதிர்நோக்கி உள்ளேன். வலுவான அணிக்கு எதிராக ஆடுவது எனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்' என்றார்.

    • பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது.
    • பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. சல்மான் ஆகா சதம் அடித்தார்.

    அவர் 87 பந்தில் 105 ரன்னும் (9 பவுண்டரி), ஹூசைன் தலத் 62 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹசரங்கா 52 பந்தில் 59 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும்.
    • முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வரும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதனால் டிரேட் முறையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஏதும் செய்ய தேவையில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    மும்பை ஒரு அற்புதமான அணி. அவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தீபக் சாஹர் போன்ற ஒருவரை மாற்றுவது பற்றி அவர்கள் யோசிக்கலாம். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை.

    ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரியான் ரிக்கல்டன் என சொல்லி கொண்டே போகலாம். ஒரு அணிக்கு வேறு என்ன தேவை. எனவே அவர்களுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தேவை. அது ஒரு துப்பாக்கி அணியாக இருக்கும்.

    மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும். அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் எடுக்கலாம். ஆனால் முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

    என்று பத்ரிநாத் கூறினார்.

    • ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம்.
    • கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும் அதன்பிறகு ஒருநாள், டி20 தொடரும் நடக்கவுள்ளது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம். கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போதைய இந்திய அணியில் அதற்கும் மேல் உள்ளனர்.

    ஆசிய கோப்பையில் பும்ராவை முதல் 3 ஓவர்கள் வீச செய்தது நல்ல பலன் தந்ததால், பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
    • தான், நலமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் காயத்திலிருந்து இன்னும் மீண்டு வராததால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

    • சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
    • சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.

    அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையான வீரர். அவர் பல ஆண்டுகளாக அணிக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இடம் பெற வேண்டும்.

    என கூறினார்.

    ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • காஷ்மீர் அணி 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மூ காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.

    • ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.

    இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.

    இந்நிலையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயஸ் அணி பெறுவதற்கான வர்த்தகத்திற்கு இரு அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×