என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
    • அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது.

    ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.

    • இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
    • இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

    ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.

    • மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
    • அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

    அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

    • கடைசியாக கடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது
    • சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது

    சாம்பியன்ஸ் லீக் T20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. 2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் அடுத்தாண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடத்தப்படவுள்ளது. இதில், இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் THE HUNDRED போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

    தற்போது ரிஷப் பண்ட் 88 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித்துடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார். 

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர்இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய கம்போஜ் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின் தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
    • இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல் குர்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்

    பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி அவர்கள் விளையாட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
    • இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    கிங்ஸ்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.

    • மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    லண்டன்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    சவுத்தாம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என

    முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 30 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கோடினார்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டாமி பியூமெண்ட் 34 ரன் எடுத்தார்.

    ஏமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடினார். நாட் சீவர் பிரண்ட் 21 ரன்னில் வெளியேறினார்.

    மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 ஓவரில் 115 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இறுதியில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.

    • புனேவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கம் திருடுபோயுள்ளது.
    • போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.

    புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
    • முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

    இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், "கருண் நாயர் சிறப்பான பங்களிப்பைத் தருவதாக நாங்கள் உணர்கிறோம். 3-வது இடத்தில் களமிறங்கும் வீரரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், நமக்குப் பலனளிக்காத சிறிய விஷயங்கள் சரிசெய்யப்படும்"என்று தெரிவித்தார்.

    ×