என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

    தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பஷிருக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றுள்ளார்.

    4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-

    க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸ்மித், லியாம் டாசன், வோக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர்.

    • 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி எதிர்வரும் ஜூலை 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

    4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து சக வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனக்குத் தெரிந்தவரை பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு பந்துவீசி வருகிறார். இருப்பினும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களுடைய திட்டத்தை எளிதாக வைத்துள்ளோம். என்று கூறினார்.

    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம்.
    • நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.

    லண்டன்:

    இந்திய டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலியின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றுவதை செய்வதை நிறுத்திவிட்டு, தனது இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அறிவுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் சுப்மன் கில் விஷயங்களைக் கையாளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த காலத்தில் விராட் கோலி செய்ததை அவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை.

    அவர், "ஐபிஎல்-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, அவர் ஒரு ஆக்ரோஷமான மனநிலைக்குச் செல்வதையும், நடுவர்களுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். இது கில்லின் இயல்பு அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

    டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல.

    ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும்போது ஆடியோவில் வரும் மொழி மற்றும் வார்த்தைகளில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இது ஒரு போக்காகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.

    என்று மனோஜ் திவாரி கூறினார்.

    • சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது.
    • நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய அணியை பொறுத்தவரை நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 4-வது போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.


    இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இளம் வேகப்பந்து காம்போஜ் ஆடும் லெவனில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த போட்டியில் குல்தீப் களமிறங்குவாரா அல்லது காம்போஜ் களாமிறங்குவாரா அல்லது இருவருமே களமிறங்குவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமார் விலகி உள்ளார்.
    • காயம் காரணமாக 4-வது போட்டியில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கு விலகியுள்ளார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

    இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

    • விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது.
    • அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.

    பர்மிங்காம்:

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

    ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

    இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி தனது கருத்தை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.

    முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும்.

    இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்ளதான் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
    • இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.

    டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டது. இந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்சித் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி:-

    ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.

    • இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
    • நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனர்.

    இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிரெட் லீ தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரெட் லீ கூறியதாவது:-

    நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்.

    என கூறினார்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
    • 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் காயமடைந்தார்.

    இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

    இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

    • முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப் புக்கு 189 ரன் எடுத்தது.
    • ஆஸ்திரேலியா அணி 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப் புக்கு 189 ரன் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 190 ரன் இலக்காக இருந்தது.

    ரோஸ்டன் சேஸ் 32 பந்தில் 60 ரன்னும் (9 பவுண் டரி, 2 சிக்சர்), கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயா 19 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பென் துவார்ஷ்யிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 190 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேமரூன் கிரீன் 26 பந்தில் 51 ரன்னும் (2 பவுண் டரி, 5 சிக்சர்), மிச்சேல் ஓவன் 27 பந்தில் 50 ரன்னும் (6 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

    • மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    மான்செஸ்டர்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    • லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
    • அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது.

    ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.

    ×