என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
    • ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு, போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லலாம். இச்சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை வீரர் மதுஷங்கா காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்கா வீரர் U-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர்.

    ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. களம் இறங்க 10 அணிகளும் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களும் போட்டிகளை காண ஆர்வமாக உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வெல்ல களம் இறங்க இருக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த மதுஷங்கா இடம் பெற்றிருந்தார். இவர் காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் தென்ஆப்பிரிக்காவின் 17 வயதான மபாவா என்ற இளம் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான மபாகா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்து வீசினார். 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    இவர் தென்ஆப்பிரிக்கா ஏ, தென்ஆப்பிரிக்கா எமெர்ஜிங் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் வீரர்கள் அறையை மலிங்கா, பும்ரா ஆகிய ஜாம்பவான்கள் உடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட மபாகா, பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்துகள் வீசுவதிலும் சிறந்து விளங்குகிறார்.

    • சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
    • இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் நாளைமறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணிகள் வீரர்களும் சென்னையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்த 6 ஆர்சிபி வீரர்கள் இடம் பெற்றனர். அதில் டுபிளிசிஸ், விராட், மேக்ஸ்வெல், சிராஜ், பட்டித்தார், மணிபால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    அப்போது முன்பக்க ஜெர்சியை புகைப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல பின்பக்க ஜெர்சியை படம் எடுக்க திரும்புமாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர். திரும்பிய வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் இடுப்பை ஆட்டி நடனம் ஆடினார். இதனை பார்த்த டுபிளிசிஸ், விராட், சிராஜ் ஆகியோர் சிரித்தனர்.

    இது மட்டுமல்லாம் ஸ்பான்சர் (KEI) நிறுவனத்தின் பெயரை கேப்டன் டுபிளிசிஸ் திறந்து வைத்தார். அப்போது வெடி சத்தத்துடன் வண்ண காகிதங்கள் பூக்களை போன்று சிதறியது. இதை எதிர்பாராத டுபிளிசிஸ் காதை மூடிக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த விராட் மற்றும் மேக்ஸ்வேல் வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
    • பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த முறை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். இவர் கேப்டனாக செயல்படுவது ரோகித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாண்ட்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் நேற்றும் ஹர்திக் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர். அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. இதுவும் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

    இந்நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஒரு வீடியோவை மும்பை வெளியிட்டள்ளது. அதில் பயிற்சி குறித்து மும்பை வீரர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார். இருவரும் சிரித்த முகத்துடன் பேசி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான்.
    • அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.

    இந்தியாவில் நடைபெற்ற 2-வது சீசன் மகளிர் பிரீமியர் லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர்.

    அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஆர்சிபி அணியின் ஷ்ரேயங்கா பாட்டிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து கோப்பையை வென்ற ஆர்சிபி மகளிர் அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஷ்ரேயங்கா பாட்டில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, என் வாழ்க்கையின் சிறந்த தருணம் என பதிவுசெய்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயங்கா பாட்டில் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

    அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான். அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன். நேற்று இரவு, என் வாழ்வின் மிகசிறப்பு வாய்ந்த தருணம். விராட் கோலி என்னை நோக்கி, "ஹாய் ஷ்ரேயங்கா, நன்றாக பந்துவீசினாய்" என்றார். உண்மையில் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது.

    என அவர் கூறினார்.

    இப்பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
    • இதில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக ஆர்சிபி அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் இதுவரை இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளனர். இதில் ஒரு முறை ஆர்சிபியும் 7 முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளது.

    • பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆர்சிபி வெற்றி பெற்றதை பார்த்தோம்.
    • அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் கவுரவிக்கப்பட்டனர். மந்தனா கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்த போது இரு புறமும் பெங்களூரு அணி வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

    இதில் ஆண்கள் ஆர்சிபி அணிகள் பங்கேற்று அவர்களை கவுரவித்தனர். பின்னர் வீராங்கனைகள் மைதானத்தில் கோப்பையுடன் உற்சாகமாக வலம் வந்தனர். அப்போது ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:-

    பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதை பார்த்தோம். அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன். அதை செய்தால் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஐ.பி.எல். கோப்பையை வென்று, அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவு.

    இங்குள்ள அந்த அணி (பெங்களூரு) முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். மேலும் அவர் கிங் என்று கூற வேண்டாம். விராட் என்றே கூறுங்கள்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    • வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஹசரங்கா இடம் பெற்றிருந்தார்.
    • நடுவரை கேலி செய்ததால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கையும் ஒருநாள் தொடரை வங்காளதேசமும் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

    இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.

    4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    • அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

    முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது.
    • 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளமறுநாள் தொடங்க உள்ளது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஒவ்வோரு அணியும் ஜெர்சி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணியும் தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வது பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாம அதற்கான உபகரணங்களும் அணி வீரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இப்போ வரையும் சில போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடுவதை வழக்கமாக ஆர்சிபி அணி கொண்டுள்ளது.

    2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

    • 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.

    அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

    2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.

    சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித், கேஎல் ராகுல், சுனில் ஷெட்டி ஆகியோர் ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர்.
    • அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஐபிஎல் தொடர் 2024 இன்னும் 2 தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வந்து விட்டால் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த முறை ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அவரது மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் ஒருவரான ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அந்த விளம்பரத்தில் ரோகித் மற்றும் சுனில் ஒரு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வந்த கேஎல் ராகுல் மீதமுள்ள ஒரு நாற்காலியில் உட்கார முயல்வார். உடனே ரோகித், இது குடும்ப உணவு சாப்பிடுகிறோம் என கூறுவார். உடனே ராகுல் சோகத்துடன் சுனில் ஷெட்டியை பார்த்து அப்பா என்று கூற உடனே சுனில் ஷெட்டி நோ அப்பா. ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிவிட்டது. சர்மா தான் என் மகன். சர்மா ஆப்பிள் சாப்பிடு என அன்போடு ஊட்டிவிடுவார் ஷெட்டி. இதை பார்த்த ராகுல் கவலையுடன் அந்த இடத்தில் இருந்து நகர்வார்.

    இந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய விளம்பரம் இது போன்று நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

    ×