search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shreyanka Patil"

    • அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான்.
    • அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.

    இந்தியாவில் நடைபெற்ற 2-வது சீசன் மகளிர் பிரீமியர் லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர்.

    அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஆர்சிபி அணியின் ஷ்ரேயங்கா பாட்டிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து கோப்பையை வென்ற ஆர்சிபி மகளிர் அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஷ்ரேயங்கா பாட்டில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, என் வாழ்க்கையின் சிறந்த தருணம் என பதிவுசெய்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயங்கா பாட்டில் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

    அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான். அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன். நேற்று இரவு, என் வாழ்வின் மிகசிறப்பு வாய்ந்த தருணம். விராட் கோலி என்னை நோக்கி, "ஹாய் ஷ்ரேயங்கா, நன்றாக பந்துவீசினாய்" என்றார். உண்மையில் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது.

    என அவர் கூறினார்.

    இப்பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதனபடி முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பெங்களூரு அணி 12.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரஸ்யமான விசயம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என எழுதியிருந்தது. இது மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த ஆர்சிபி வீராங்கானைகள் சிரித்தப்படி அதனை பார்த்தனர். அதில் ஸ்ரேயங்காவும் ஒருவர். 

    ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை திருமணம் செய்ய ஆசை படுவதாக நிறைய ரசிகைகள் பேனர் வைப்பதுண்டு. அந்த வகையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×