என் மலர்
விளையாட்டு
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை அதனை மாற்றியுள்ளது.
- ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகிறது.
பெங்களூரு:
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 மாற்றங்களை கொண்டுள்ளது. கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என்ற பெயரில் விளையாடவுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் பெயரை மாற்றி இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜெர்சியின் வண்ணத்தையும் மாற்றியுள்ளது. ரெட் மற்றும் கருப்பு கலரில் இருந்த ஜெர்சியை தற்போது நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது. கடைசியா ஆர்சிபி அணியின் லோகோவை மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரிசிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.
- தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகலை ஹாங்காங் வீரர் வீழ்த்தினார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் சாக் லாம் கோல்மேன் வாங்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்த வாங் அடுத்த இரு செட்களை 6-1, 7-5 என கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் சுமித் நாகல் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
- ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சி.எஸ்.கே. கேப்டன் டோனி கடந்த 5-ந்தேதியே சென்னை வந்துவிட்டார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக அவர் பெங்களூர் வந்து அணியோடு இணைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் விராட்கோலியை பார்த்து ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். அவர்கள் கோலி...கோலி... என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஆர்.சி.பி. அணியின் பெயர் இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதற்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இனி அழைக்கப்படும்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் நடக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனமும் இடம் பெறுகிறது. பிரபல இந்தி நடிகர்களான அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறார்கள். பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
ஐ.பி.எல். தொடக்க போட்டிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.
சென்னை:
உலகின் முதல் தமிழ் 'ஹைப்பர்லோக்கல்' செயலி என்கிற பெருமித அடையாளத்துடன் கடந்த ஜனவரி 22-ந்தேதி மின்மினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் மின்மினி செயலியை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் சிறப்பான விதத்தில் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது மின்மினி. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான அன்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியின் சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது மின்மினி.
இதுகுறித்து மின்மினியின் செயல் துணை தலைவர் எஸ்.ஸ்ரீராம் கூறியதாவது:-
இது எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான தருணம். சி.எஸ்.கே அணியுடன் இணைவதன் மூலம் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுடனும், குறிப்பாக தமிழக மக்களுடனும் இன்னும் நெருக்கமாக பயணிக்க போகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் எங்களது பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க திட்டமிட்டுளோம். ஆர்வமுள்ள பயனர்கள் சிஎஸ்கே அணியையும், வீரர்களையும் வாழ்த்தி #minminiCSK என்ற ஹேஷ்டாக்-உடன் வீடியோவை மின்மினியில் வெளியிட வேண்டும்.
இந்த போட்டியில் பயனர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் வெளியிடப்போகும் அனைத்து வீடியோக்களையும் எங்கள் மின்மினி நடுவர் குழு பார்த்து பரிசீலனை செய்த பிறகு வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடக்கும் நாளிற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு நடுவர் குழு தேர்வு செய்த வெற்றியாளர்களின் விவரம் மின்மினி செயலியில் அறிவிக்கப்படும்.
உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு அம்சத்தையும் மின்மினி செயலியில் கொண்டுவந்துள்ளோம். இதில் பயனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தலாம், பிற பயனர்களுடன் கலந்துரையாடலாம், பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம்.
மின்மினி அனைவருக்குமான டிஜிட்டல் தளமாக செயல்படும் குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள், அங்கீகரிப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்கள், மேலும் எங்கள் அணியால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டி சேனல் நெட்வொர்க் குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான வாய்ப்பை மின்மினி வழங்குகிறது.
இத்தனைக்கும் மகுடம் வைத்தது போல தற்போது சி.எஸ்.கே அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது, எங்களது இளம் மின்மினி குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.
மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். சி.எஸ்.கே போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்களை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்மினி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பார்ட்னர்ஷிப் குறித்து சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், 'உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகியுள்ள மின்மினி செயலியுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு பல ஆச்சரியமூட்டும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்' என்றார்.
- ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்திருந்தது.
- டெல்லி அணியில் விளையாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக நியமனம்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். 26 வயதான இவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்து சுமார் 14 மாதங்களுக்குப் பின் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டின் தேசிய அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.
இதனால் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியானது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரிஷப் பண்ட் காயம் காரணமாக 2023 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சேர்மனும், இணை-உரிமையாளருமான பார்த் ஜிண்டால் கூறுகையில் "ரிஷப் பண்ட்-ஐ எங்கள் அணியின் கேப்டனாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய ஆர்வத்தொடு, உற்சாகத்துடன் 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எங்கள் அணியுடன் வருவதை பார்க்க காத்திருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக தகவல் பரவியிருக்கிறது.
- இந்த பயிற்சி ஆட்டத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது.
சென்னை:
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாகவும் அதனை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் டோனியை காண்பதற்காக மதியம் முதல் இரவு வரை காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த செய்தி தவறானது என சேப்பாக்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி டோனி டோனி என முழக்கமிட்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனால் சோகத்துடன் சேப்பாக்கத்தில் இருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். டோனியை பார்க்க வந்த நாங்கள் சிஎஸ்கே வீரர்கள் சென்ற பஸ்சை மட்டும் தான் பார்த்தோம் என மனகுமுறலுடன் ரசிகர்கள் கூறி சென்றனர்.
- டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.
- இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மும்பை:
2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஒவ்வோரு ஐபிஎல் தொடரின் போதும் புதுப்புது விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது. அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு "ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்" என பிசிசிஐ பெயரிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு நடுவர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி நடுவரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள்.
டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. அந்தவகையில் இதுவரை டிவி நடுவருக்கும் ஹாக்ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையில் ஒரு வழித்தடமாக இருந்த டிவி ஒளிபரப்பு இயக்குனர், இனி புதிய முறையின் கீழ் ஈடுபடமாட்டார்.
அதன்படி டிவி நடுவர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். நடுவர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள். இதில் இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் எட்டு அதிவேக கேமராக்களை மைதானத்தில் பொருத்தி போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.
டிவி நடுவர்கள் கேட்கும் போது அந்த எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும். அதன் மூலம் டிவி நடுவர் இனி விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும். அதே போல, எல்பிடபுள்யூ-வின் போதும் வழக்கமாக அவுட்சைடு லெக் திசையில் பந்து பிட்ச் ஆகி இருந்தால் அதை முன்கூட்டியே ஹாக்ஐ நிறுவன வல்லுநர் கூறி விடுவார்.
இதன் மூலம், டிவி நடுவர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபுள்யூவை மறுக்க முடியும். அதன் மூலம் அதிக நேரம் ஆவதை தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
- ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.
மெஸ்ஸியின் மாயாஜாலத்தை எதிர்பார்த்து டிக்கெட் வாங்கிய ஹாங்காங் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்ப அளிக்க நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.
ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் கோபத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.
இதனால் போட்டியை முன்னெடுத்த நிர்வாகிகள் தரப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பப் பெறலாம் என்றும், ஆனால் சட்ட ரீதியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டணத்தை திருப்பித் தருவதால் 7.1 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் தோராயமாக 4,880 ஹாங்காங் டாலர் செலவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 38,000 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
ரசிகர்கள் நீதிமன்றம் அளவுக்கு செல்ல காரணமாக இருந்தது மெஸ்ஸி இதற்கு அடுத்த போட்டியில் விளையாடியதுதான். இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வெடுத்த மெஸ்ஸி, அடுத்த நாள் ஜப்பான் அணிக்கு எதிராக களமிறங்கினார் என்பதே ரசிகர்களை கொதிப்படைய வைத்திருந்தது.
- நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
- இதில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சியை பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விராட் கோலி அந்த ஜெர்சியுடன் இருப்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜெர்சியை பார்த்த நெட்டிசன்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஜெர்சி போல உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சொல்வது போல ஆர்சிபி அணியின் ஜெர்சி டெல்லி அணியின் ஜெர்சி போலதான் உள்ளது. மேலும் சிலர் சைரனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர்.

- சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார்.
- அதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
ஐபிஎல் தொடர் 2024 வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார்.
ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது வரை அதற்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தற்போது டிரெண்டாகி வருகிறார்.
அது ஏன் என்றால். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார். இவர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசில ரசிகர்கள் ரோகித்க்கு ஆதரவாகவும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி வைத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தனர்.
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த சோதனை நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் காரணமாக தான் அவர் அந்த ஸ்டோரி வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் உள்ளது.
- இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
- இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது
விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.
மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
- நேற்றைய போட்டியில் காயமடைந்த வங்காளதேச வீரர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு கிளம்பியுள்ளார்.
டாக்கா:
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள். அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Whistle Vanakkam, @Mustafiz90! ?#WhistlePodu #DenComing pic.twitter.com/KGGzd3LTSg
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2024






