என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
    • இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது

    விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

    இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.

    மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

    விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • நேற்றைய போட்டியில் காயமடைந்த வங்காளதேச வீரர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு கிளம்பியுள்ளார்.

    டாக்கா:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

    இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள். அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது.
    • மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் விலகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்றாக இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லூக் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காலில் எலும்பு முறிவுதான் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதற்கு காரணம் என ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் பயிற்சியின் போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது யாருடைய தவறும் அல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

    இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதை நான் மிகவும் விரும்பினேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தவறவிட்டதற்காக நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். இந்த சீசன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வெற்றிகரமான சீசனாக இருக்க வாழ்த்துகிறேன். அடுத்த ஆண்டு மீண்டும் நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு பெஹ்ரண்டோர்ஃப் கூறினார்.

    • ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியில் இணைந்த வண்ணம் உள்ளது.

    அந்த வகையில் இந்திய வீரர்களான ரோகித், விராட் ஆகியோர் அவர்களது அணியான மும்பை, பெங்களூர் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் RIP ஹர்திக் பாண்ட்யா என்ற ஹேஸ்டேக் மற்றும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஹேஸ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட வீடியோவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும் தான் காரணம். மும்பை நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர்.

    அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ரோகித் சோகமான முகத்துடன் காணப்பட்டனர். இதற்கு ரசிகர்கள் ரோகித்துடன் பாண்ட்யா உட்கார்ந்து இருப்பதை பார்க்க வேதனையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.

    மேலும் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரைக்கையாளர்கள் ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • கடந்த ஆண்டு ரகானே சிறப்பாக விளையாடினார். அவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம்.

    சென்னை:

    குருநானக் கல்லூரி சார்பில் பவித்சிங் நாயர் நினைவு 10-வது அகில இந்திய கல்லூரிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. 23-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்கின்றன.

    இந்த போட்டித் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா இடம் பெற்றுள்ளார். அவர் கான்வே போலவே விளையாடக் கூடியவர்.

    கடந்த ஆண்டு ரகானே சிறப்பாக விளையாடினார். அவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம். கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக களம் இறங்க ரவீந்திரா அல்லது ரகானே உள்ளனர்.

    ஆனால் அதை நான் உறுதியாக கூற முடியாது. கேப்டனும், பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள். அம்பத்தி ராயுடு இடத்தில் புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    ரிஸ்வி தற்போது தான் ஐ.பி.எல். கேரியரை தொடங்க உள்ளார். எனவே அம்பத்தி ராயுடு பல வருடங்களாக செய்ததை அவர் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அவரை நாங்கள் முன்னேற்றுவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளோம்.

    அவரிடம் இயற்கையாக திறன் இருக்கிறது. எனவே இது எந்த அளவுக்கு செல்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம். பந்தை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடிய அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன்.திறமையுடைய இளம் வீரராக தெரியும் அவருடன் இணைந்து வேலை செய்ய உள்ளேன். அவருக்கு இந்தத் தொடரிலும் வருங்காலங்களிலும் அசத்துவதற்கு தேவையான முன்னேற்றத்தை பேட்டிங்கில் காண்பதற்கு உதவ உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.பி.எல். 2024 போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.
    • பிரபல ஹேர்-ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் கோலியின் புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 -ல் விராட் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விராட் கோலி களமிறங்கும்போது, அவரது புதிய சிகை அலங்கார தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளது.

    பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் , விராட் கோலியின் புதிய 'ஹேர் கட்' புகைப்படத்தை தற்போது 'இன்ஸ்டாகிராமில்' பகிர்ந்துள்ளார். இது வெளியான சிறிது நேரத்தில் வைரலாகியுள்ளது. விராட் கோலியின் புத்தம் புதிய 'ஹேர் ஸ்டைலிங்' மிகவும் வித்தியாசமாக உள்ளது.




     

    கடந்த மாதம் விராட் கோலி 2-வது முறையாக தந்தையானார். இதனால் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் அவர் ஐ.பி.எல். 2024 போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.

    பிரபல ஹேர்-ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் கோலியின் புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    • ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் மத்திய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர்.

    இதில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் ரூ.1 கோடிக்கான (கிரேடு-சி) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணன், தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்காக அவர்கள் 3 பேர் அடங்கிய குழுவை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்கள் அணிகளின் உள்ளூர் போட்டியை நடத்தும் போது நிறைய சிக்கல்கள் எழுந்தன. வட இந்தியாவில், குறிப்பாக ரஞ்சி டிராபியின் போது, டிசம்பர், ஜனவரில் மோசமான வானிலை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆண்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்த டிராவிட், லட்சுமனண் அகர்கர் ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

    • ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 72 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒமர்சாய் 4 விக்கெட்டும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • காயம் காரணமாக கடைசி நான்கு போட்டிகளில் இருந்து விலகினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அந்த அணியின் கேப்டன் ஆவார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்வில்லை.

    பெங்களூருவில் உள்ள பிசிசிஐ கிரிக்கெட் அகாடமியில் உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கும் நிலையில் நாளை லக்னோ அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 21 அல்லது 22-ந்தேதிதான் அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. இன்று பெங்களூருவில் இருந்து அவர் லக்கோ அணியில் இணைவதற்காக புறப்படமாட்டார் எனத் தெரிகிறது.

    நாளைமறுதினம் ஐபிஎல் அணி கேப்டன்கள் போட்டோ எடுப்பதற்கான ஒன்று கூடுவார்கள். எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பின் லக்னோ அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வருகிற 24-ந்தேதி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

    20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

    • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

    முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    முல்தான் சுல்தான்  அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

    போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரேண்டர்ஃப் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து, அணியை தயார் படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேண்டர்ஃப் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வுட்-ஐ மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான வுட் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 லட்சம் ரூபாய் விலைில் வுட்டை அணியில் இணைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்து சீசனில் சிறப்பாக செயல்பட்டார். ஆர்ச்சர், பும்ரா இல்லாத நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    வருகிற 22-ந்தேதி ஐபிஎல் 17-வது சீசன் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மார்ச் 24-ந்தேதி மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

    • ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை ஹரங்கா தவறவிடுவார் என தெரிகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ×